மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘நமோ ட்ரோன் நிதி’ திட்டத்தின் ஒரு பகுதியாக 14,500 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் ஒரு குழுவிற்கு ரூ.8 லட்சம் வழங்கப்படும். மீதமுள்ள தொகையை 3% வட்டியில் தேசிய வேளாண்மை நிதியளிப்பு வசதியிலிருந்து கடனாகப் பெறலாம். இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.1,261 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.