அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட நாட்டில் உள்ள 97.5 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் ஜெயா தாக்கூர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணையின் போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.