விந்தணு எண்ணிக்கை குறைபாட்டை தீர்க்கும் ஜாதிக்காய்
மலேசியாவில் பினாங்கிலும், நம் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் உற்பத்தியாகிறது ஜாதிக்காய். விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு, `சுவாசகாசம்’ எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது. ரத்தத்தில் கொழுப்பை குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும் ஜாதிக்காய் செயலாற்றுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.