திருப்பத்தூரை சேர்ந்த ரேவதி (23) எனபவருக்கு மகேஸ்வரன் என்பவருடன் 2019ல் திருமணம் ஆனது. அதே ஆண்டு உறவினரான சித்ரா வீட்டிற்கு ரேவதி சென்ற போது அவருக்கு மயக்க மருந்து தரப்பட்டது. பின்னர் சித்ராவும், அவர் கள்ளக்காதலன் செல்வராஜும் சேர்ந்து ரேவதியை கொன்று அவரின் 9 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர். இந்த வழக்கில் கைதான இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று முன்தினம் (நவ. 22) தீர்ப்பளித்தது.