செங்குணத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு

56பார்த்தது
உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1ஆம் தேதியன்று ஆண்டுதோறும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் செங்குணம் ஊ. ஒ. தொ. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திட அல்லது திரவக்கழிவு மேலாண்மை வசதிகளைக் கொண்ட ஊராட்சிகளாக அறிவித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கை, வரவு செலவு மற்றும் பணிகள் தேர்வு செய்தல், தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 18 முதல் 35 வயது உடையவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் ஏழை எளிய மக்களின் நலிவுற்ற தன்மையும், வறுமையும் குறைப்பதற்காக கிராம செழுமை மீட்சி திட்டம் குறித்த திட்ட அறிக்கை, கூட்டாண்மை வாழ்வாதாரம் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளியின் பெயர் மாற்றம் அல்லது பெயர் சேர்த்தல் தொடர்பான விவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி