கோவை: மது போதையில் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் மோதிய நபர்
கோவை மாவட்டம், உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் நீலிக்கோணம்பாளையம் ஐயர் லே அவுட் இல் உள்ள அவரது நண்பர் வீட்டிற்க்கு நேற்று (நவம்பர் 24) இரவு 11. 30 மணிக்கு மது போதையில் அவருடைய மாருதி காரில் வேகமாக சென்றிருக்கிறார். அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மற்றும் அவரின் குழந்தையின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். முருகானந்தத்தை அந்த பகுதி மக்கள் பிடித்தபோது அவர் தகராறு செய்துள்ளார். அவர் மீது பொது மக்கள் காவல்துறை உதவி எண் 100 க்கு அழைத்து புகார் செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.