நீலகிரி குன்னூரில் வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து குன்னூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் கடைகளை 41. 50கோடி மதிப்பீட்டில் இடித்து கட்டுவதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது இதனைத் தொடர்ந்து மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர் இந்நிலையில் வருகிற 29ஆம் தேதி 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வியாபாரிகள் குடியிருப்புகளில் கருப்புக் கொடி ஏற்றுவதாகவும் வருகிற இரண்டாம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்னைத் தொடர்ந்து வியாபாரிகளிடம் இந்த போராட்டம் தொடர்பாக சார் ஆட்சியர் சங்கீதா குன்னூர் டிஎஸ்பி ரவி மற்றும் நகராட்சி அதிகாரிகள் விளக்கம் கேட்டனர் இதற்கு பதில் அளித்த வியாபாரிகள் மாவட்ட வணிகர் சங்க முடிவின்படி இந்த போராட்டத்தில் ஈடுபாடு உள்ளதாக தெரிவித்தனர்.