சர்வதேச விண்வெளி வீராங்கனை
சுனிதா வில்லியம்ஸ் உருவத்தை 15 நிமிடத்தில் அரிசியில் வரைந்த ஓவியர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில், சர்வ தேச விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உருவத்தை தத்ரூபமாக அரிசியில் 15 நிமிடங்களில் வரைந்த ஓவியரின் வீடியோ, சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
பூமி திரும்பியதை உலகமே கொண்டாடி வரும் நிலையில், அவரது உருவத்தை நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த ஓவியர் பிரவீன் தத்ரூபமாக அரிசியில் வரைந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு குன்னூரில் உள்ள லாம்ஸ்ராக் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிக ளின் புகைப்படத்தை வரைந்து கொடுத்து வந்தார்.
தற்போது குன்னூரில் அவரது உறவினர் வீட்டிற்கு வந்த ஓவியர் பிரவீன், சர்வதேச விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பிய நிலையில் அவரின் புகைப்படத்தை 15 நிமிடங்களில், அரிசி மூலமாக, தத்ரூபமாக வரைந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்த ளங்களில் வைரலாகி வருகிறது.