நீலகிரி மாவட்டம், உதகை வடக்கு ஒன்றியம் சார்பில், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், ஒன்றிய கழகச் செயலாளர் கே. ஆர். காமராஜ் தலைமையில் கூக்கல்தொரையில் நடைபெற்றது, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கெந்தொரை மகேஷ் வரவேற்றார்.
நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே. எம். ராஜூ அவர்கள், தலைமை கழக பேச்சாளர் கோவை துரைமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவை தலைவர் போஜன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன்குமார், தொரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், ஒன்றிய அவை கழக தலைவர் குண்டன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் விக்டர் பால், சுகுணா, தங்கராஜ், ஒன்றிய பொருளாளர் செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் பசவன், விஸ்வநாதன், ராஜு, முன்னாள் உதகை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாயன் உட்பட கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், செயல் வீரர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் பால்ராஜ் அவர்கள் நன்றி கூறினார்.