நீலகிரி: பொது நல சங்கம் சார்பில் 11-வது ஆண்டு இரத்ததான முகாம்

63பார்த்தது
நீலகிரி: பொது நல சங்கம் சார்பில் 11-வது ஆண்டு இரத்ததான முகாம்
சங்க அலுவலகம் அமைந்துள்ள முருகன் லாட்ஜ் பகுதியில் நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கார்த்திக், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்தம் தானம் செய்தனர். 

இதனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் ராகவேந்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தங்களை சேகரித்தனர். இதில் சிறப்பு என்னவென்றால் இதே சமுதாயத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் 51 வது முறையாக இரத்தம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் சங்கத்தின் கௌரவ தலைவர்கள் ஹரி கிருஷ்ணன், ராயப்பன், துணைத் தலைவர் நந்தகுமார், அமைப்பாளர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர்கள் ராஜ்குமார் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் சிவச்சந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி