கீழ்குந்தா திமுக சார்பில் நீலகிரி மாவட்ட மருத்துவர் அணி, BS மருத்துவமனை, லோட்டஸ் கண் மருத்துவமனை, ஹட்டாரி பாலிடெக்னிக், சியோன் ரத்த பரிசோதனை நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று கீழ்குந்தா நடைபெற்றது.
கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதியார் அவர்களின் 72 - வது பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. கே. எம். ராஜு அவர்களின் தலைமையில் மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் திரு. தீபக் பரதன் அவர்களின் ஏற்பாட்டின் படி கீழ்குந்தா கிளை கழக செயலாளர் திரு. ராஜேந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் திரு. பவிஷ் மற்றும் மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் திரு. முகமது இப்ராகிம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் திரு. கே. போஜன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு. ஆர். பி. பரமேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர் திரு. வீரபத்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. இமயம் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.