போராட்டம்நடத்தப்போவதாக வணிகர் சங்கங்களின்பேரமைப்பு அறிவிப்பு

57பார்த்தது
நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 8000 சுற்றுலா வாகனங்கள் வர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும் சுற்றுலாத் தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விரைவில் நீலகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்டம் சார்பில் அறிவிப்பு.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும். மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகளோ, ஐடி நிறுவனங்களோ இல்லாத நிலையில் சுற்றுலா தொழிலையும், விவசாயத்தையும் கொண்டு பொருளாதாரம் நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி