குற்றவாளியை ஒடிசா சென்று தட்டி தூக்கிய நீலகிரி போலீசார்

52பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வட மாநில தொழிலாளியை படுகொலை செய்த குற்றவாளியை ஒடிசா சென்று தட்டி தூக்கிய குன்னூர் போலீசார். கைது செய்து குற்றவாளியை ரயில்  மூலம் குன்னூர்  கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணி புரிய ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்து நரேந்திரன் (42) வீரேந்திரன் ஆகியோர் இருவர் கடந்த ஒரு வாரமாக பணியாற்றி வந்த நிலையில் அவர்களுக்கு தங்குவதற்காக மரப்பாலம் பகுதியில் தோட்ட நிர்வாகம் சார்பாக தங்குவதற்கு வீடு ஒதுக்கப் பட்டிருந்தது இந்நிலையில் பதினெட்டாம் தேதி நரேந்திரன் பணிக்கு வராததால் மேலாளர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நரேந்திரன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை  பார்த்து அதிர்ச்சி அடைந்த மேலாளர்  உடனடியாக  காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி