நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை இடையே கோடை சீசனை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை குன்னூர் ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்தென்னக ரயில்வே அறிவிப்பு.
நீலகிரி மாவட்டத்தில் கோட சீசன் துவங்க இன்னும் ஓரிரு வாரங்கள் உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்கள் பொலிவு படுத்தப்பட்டதுடன் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்து வகையில் லட்சக்கணக்கான மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற மலை ரயில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இம்மாதம் 28ஆம் தேதி முதல் ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை குன்னூர்- ஊட்டி இடையே வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.