நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.
499- கோடி மதிப்பீட்டில் 700-படுக்கை வசதியுடன், 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள உதகை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையானது இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மலை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியானது உதகை அரசு மருத்துவக் கல்லூரி என்பது தமிழ்நாட்டிற்கு பெருமையாகும்.
பழங்குடியினர் மக்கள் தனியாக சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதியுடன் தனி அறைகள், அதிநவீன மருத்துவ கருவி வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள, இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக ஏப்ரல் 5 மற்றும் 6ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறந்து வைக்கள்ளார்.