நீலகிரியில் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

59பார்த்தது
அடுத்த மாதம் ஏப்ரல் 5 மற்று 6 ஆகிய தேதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் வருகை புரிவது ஒட்டி மேடை அமைக்கும் இடத்தினை இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் ஆய்வு.


நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 460 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 5 மற்றும் 6ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் வருகை புரிய உள்ளார்.

இந்நிலையில் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

இதனைத் முன்னிட்டு இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் மேடை அமைக்கும் இடத்தினை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி: மு. பெ சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி