ராசிபுரம் - Rasipuram

பிள்ளாநல்லூர்: ரூ. 14 லட்சத்தில் நியாய விலைக்கடை திறப்பு விழா

பிள்ளாநல்லூர்: ரூ. 14 லட்சத்தில் நியாய விலைக்கடை திறப்பு விழா

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி, குருசாமிபாளையத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முழு நேர நியாய விலைக்கடை கட்டிடத்தை எம்பி ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் சேர்மன் கேபி. ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூர் கழக செயலாளர் சேர்மன் சுப்ரமணியம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க. பா. அருளரசு, மாவட்ட பொருளாளர் ஏகே. பாலசந்திரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்யசீலன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా