சிபிஎம் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.