இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் "சீடன்". ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில், உலகளவில் இப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது உன்னி முகுந்தனின் முதல் ரூ. 100 கோடி திரைப்படமாகும். மேலும், நூறு கோடி வசூலித்த மலையாள சினிமாவின் பட்டியலில் 6வது இடத்தைப் பெற்றுள்ளது.