அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவைக்கேற்ப 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 11,12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வழங்கக் கோரி கருத்துக்கள் சமர்பிக்கப்பட்டன. அதையேற்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தொகுப்பில் இருந்து 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு கூடுதலாக அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.