நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பட்டணம் பேரூராட்சி பகுதியில் பிள்ளையார் கோவில் அருகில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஆறாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது மாடுகளை அழைத்து தடுப்பூசி போடப்பட்டுக் கொண்டார்கள். இதில் ஏராளமான விவசாயிகள், மருத்துவர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.