அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டாஸ் பாய்ந்தது. இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில், காவல் ஆணையர் அருண், இந்த நடவடிக்கை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஞானசேகரன் வீட்டில் நேற்று (ஜன.04) காலை முதல் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.