

மயிலாடுதுறை: முளைப்பாரி திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேலூரில் ஸ்ரீ மந்த கருப்பண்ணசாமி, ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழைகாத்த அம்மன், ஸ்ரீ ஊரணி அய்யனார், ஸ்ரீ காசிலிங்க பைரவர், ஸ்ரீ செய்யா முத்தையா அய்யனார், செல்வ விநாயகர் ஆலயங்களில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலில் கரைத்தனர். பின்னர் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.