மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலையூர், கீழையூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம் மற்றும் ஆக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
காலகஸ்திநாதபுரம் சாலை அருகே புதிதாக அதிக அளவில் பருத்தி சாகுபடி இந்த ஆண்டு செய்யப்பட்டுள்ளது.
அதிக மகசூலை தருவதாகவும் நல்ல விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.