சாலை பணிகளை துவங்க கோரிக்கை

67பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வானகிரி மீனவ கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் புதிய சாலை போடும் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பணிகள் இன்று வரை நிறைவு பெறாமல் உள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்பு கற்கள் கொட்டப்பட்டு சாலையில் நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது.

இந்த சாலை பணியை விரைவில் துவங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி