அதிமுக - பாஜக கூட்டணி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2026 தேர்தலை EPS தலைமையில் தே.ஜ.கூ சந்திக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். முன்னதாக விஜய்யின் தவெக உடன் கூட்டணி வைக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. தவெக-வும் கூட்டணிக்கு காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இதனால் இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் இருந்தன. தற்போது ADMK - BJP கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், விஜய்யின் கூட்டணி கனவு தவிடுபொடியாகியுள்ளதாக கூறப்படுகிறது.