மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருக்கருகாவூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள மயான கொட்டகையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு பகுதியில் உள்ள சுடுகாட்டை உடனே அகற்றக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.