ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை வரும் ஏப்ரல் ஆறாம் தேதி பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த ரயில் சேவை ராமேஸ்வரத்தில் இருந்து வரும் ஆறாம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை வழியாக சென்னை செல்வதால் மயிலாடுதுறை ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.