மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்திற்கு எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு நீதி வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசையும் பிரதமரையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் தமிழக முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.