தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படும் நிலையில், அண்ணாமலைக்கு பாஜக-வில் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பும், அதிமுக-பாஜக கூட்டணி இறுதியான நிலையில் ஓபிஎஸ்க்கு மத்திய இணையமைச்சர் பதவியும் மத்திய பாஜக அரசு வழங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஓபிஎஸ் MGR பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.