கும்பகோணம் - Kumbakonam

கும்பகோணம்: 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் போலீஸ் குவிப்பு

கும்பகோணம்: 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் போலீஸ் குவிப்பு

கும்பகோணம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி மேலசித்தாலத்தூர் ராஜேந்திரன் என்பவர் மகன் வினோத் (வயது 30). இவர் வண்டுவாஞ்சேரி கடை வீதியில் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் பெயர் பொரித்த பழைய பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். புதிதாக சிஐடியு சங்கத்தில் சேர உள்ளதால் பழைய போர்டைக் கிழித்து அப்புறப்படுத்தி உள்ளார். இதனால் காமராஜர் காலனியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் வினோத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கலைந்து சென்று விட்டனர். இந்நிலையில் மேல சித்தாளத்தூர் முருகேசன் என்பவர் மகன் முகேஷ் பிரபு என்கிற அஜய் மது போதையில் வண்டுவாஞ்சேரி கடைவீதியில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்று கொண்டு ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக காமராஜர் தெருவை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 50க்கும் மேற்பட்ட நபர்கள் அஜய் வீட்டிற்கு வந்து ஒரு வாகனத்தை கீழே தள்ளியும் ஒரு இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி உள்ளனர். இதனால் வண்டுவாஞ்சேரி கடைவீதியில் இருதரப்பினரும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாய் தகறாறு ஏற்பட்டுள்ள நிலையில், மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜீ தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் பதட்டமாக காணப்பட்ட நிலையில் போலீசார் சமரசத்திற்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా