

நாகை: குழந்தைகளுக்கு உபகரணங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
நாகை அருகே அங்கன்வாடி மையத்தில் வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டம் சார்பில் குழந்தைகளுக்கு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர், கீழ்வேளூர் எம்எல்ஏ வழங்கினார்: தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 50 வட்டாரங்களை தேர்வு செய்து வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக முன்பருவ குழந்தைகள் கற்றலுக்கு ஏதுவாக குழந்தைகள் அமர்வதற்கான டேபிள், நாற்காலி, மேஜிக் சிலேட், ஸ்லைடு, பிளே ஸ்கூல் மேட், விளையாட்டு உபகரணங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவிகள் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், கீழையூர் வட்டாரங்களை தேர்வு செய்து முதல் கட்டமாக 25 அங்கன்வாடி மையங்களுக்கு உபகரணங்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, ஆகியோர் இன்று கீழையூர் வட்டாரம் கீழப்பிடாகு ஊராட்சி உள்ள சிந்தாமணி அங்கன்வாடி மையத்தில் தொடங்கி வைத்தனர். இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் மெர்லின் அன்னமலர், மாவட்ட திட்டப் பிரிவு அலுவலர் சண்முகம்