நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அருகே உள்ள அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல், கோவில் தாவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் உப்பு உற்பத்திக்கான வேலைப்பணியில் உப்பு உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.