32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கழனியப்பா அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த மேலதண்ணீர்ப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீபூர்ணாம்பிகா ஸ்ரீ புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீ கழனியப்ப அய்யனார் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 2 நாட்கள் தினமும் பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் இன்று காலையில் 2 கால யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசத்தை அடைந்து புனித நீரால் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.