நாகப்பட்டினம் மகாலட்சுமி நகரில் சுனாமி குடியிருப்பு கட்டப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிறது. அப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வெளியேற்றுவதற்கான வசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் சுகுமார் அப்பகுதி பொதுமக்களை சந்தித்தார். மேலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றால் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சுகுமார் தெரிவித்தார்.