நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கௌதமன், திமுக நிர்வாகிகள் பழனியப்பன், உதயம் முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.