நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா தகட்டூரில் கூலித்தொழிலாளியின் கூரை வீடு மின் கசிவின் காரணமாக எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்து வந்த முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ் மணியன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 நிதி உதவி வழங்கி மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.