நாகப்பட்டினம்:14 நாட்கள் தொழுநோய் கண்டறியும் முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

69பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருப்பூண்டி மற்றும் வடுகச்சேரி வட்டாரத்தில் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி. ஆகாஷ், தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசு பொது சுகாதார துறையின் சார்பாக தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 13.02.2025 முதல் 28.02.2025 வரை 14 நாட்களுக்கு நேரடி கள ஆய்வு தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் 2025 நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருப்பூண்டி மற்றும் வடுகச்சேரி வட்டாரத்தில் நடைபெறுகிறது. 

இம்முகாமிற்கு தொழுநோய் கண்டுபிடிப்பு குறித்து பயிற்சி பெற்ற ஆண் மற்றும் பெண் தன்னார்வலர்களும், மேற்பார்வையாளராக சுகாதார துறை ஊழியர்களும் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளை உறுதி செய்து சிகிச்சை அளிக்க மருத்துவ அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தன்னார்வலர்கள் உங்கள் வீடுதோறும் காலை 6.30 மணி முதல் வருகைபுரிந்து தொழுநோய் கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனை பணி மேற்கொண்டு புதிய தொழுநோயாளிகளைக் கண்டுபிடித்து பரிந்துரை செய்ய உள்ளார்கள். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புடைய செய்தி