நாகை அருகே நடைபெற்ற நாணய கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், செப்பேடுகள், ரூபாய் நோட்டுகள் வரலாற்றுச் சின்னங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆழியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் மரபு மன்றம் சார்பில் கண்காட்சி இன்று நடைபெற்றது.
கண்காட்சியில் சங்க கால நாணயங்கள் முதல் தற்போதைய நாணயங்கள் , பண நோட்டுகள், ஸ்டாம்ப், ஓவியங்கள், பழம்பொருட்கள் இடம்பெற்றிருந்தன. தமிழகத்துடன் வணிகம் செய்த யவனர்களின் ரோம, கிரேக்க நாணயங்கள், இந்தோ கிரேக்க நாணயங்கள், பெர்சிய, போர்ச்சுகீஸ், டேனிஷ், டச்சு, ஆங்கிலேய, பிரெஞ்சு நாணயங்கள், விஜயநகர பேரரசு, மைசூர் உடையார் காலம் என, வரலாற்றுச் சிறப்பு மிக்க நாணயங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கிந்திய கம்பெனி, 18ம் நூற்றாண்டின் இறுதி, 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதன்முதலில் அச்சடித்து வெளியிட்ட நாணயங்களில், எழுத்தை தலைகீழாக பிழையுடன் வெளியான நாணயங்கள் என, அரிய வகை நாணயங்களும் இடம் பெற்றன இதனை தொடர்ந்து தொல்லியல் மரபுகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்த்து சென்றனர்