கீழ்வேளூர் - Kilvelur

வீடியோஸ்


நாகப்பட்டினம்
அந்தோணியார் ஆலய தேர் பவனி
Jun 25, 2024, 15:06 IST/வேதாரண்யம்
வேதாரண்யம்

அந்தோணியார் ஆலய தேர் பவனி

Jun 25, 2024, 15:06 IST
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி நாகூர் பங்கு தந்தை ஆரோக்கியசாமியால் திருக்கொடி புனிதம் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. 22-ஆம் தேதி இரவு 9 மணியளவில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து நேற்று நாகூர் பங்கு தந்தை ஆரோக்கியசாமியால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருக்கொடி இறக்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்தியக்குடி கிராமவாசிகள் செய்திருந்தனர்.