உசிலம்பட்டி: ஆயில் மில் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்கானூரணி அருகே பூவரசம்பட்டியை சேர்ந்த ராமுத்தாய் (45) என்பவர் திருமங்கலம் - சோழவந்தான் ரோட்டில் உள்ள ஆயில் மில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (அக்.,19) ஆயில் எடுக்கும் இயந்திரத்தின் பெல்டில் சிக்கி இயந்திரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு துாக்கி வீசப்பட்டு பலியானார். இதையறிந்த செக்கானூரணி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.