மதுரை மாவட்டம் செக்கானூரணியில் சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் மதுரை மாவட்ட சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர் சார்பில், சைபர் குற்ற தடுப்பு காவல்துறையினர் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியின் என்சிசி, என்எஸ்எஸ் மாணவ மாணவிகள் இணைந்து சைபர் குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.
செக்காணூரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட சைபர் குற்ற தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி கருப்பையா மற்றும் மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்பி நாகராஜ் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தார்கள்.
பேரணியானது முக்கிய வீதிகளான மதுரை ரோடு, திருமங்கலம் ரோடு, தேனி ரோடு வழியாக மீண்டும் பள்ளியிலேயே நிறைவுற்றது.