உசிலம்பட்டி: டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி.

51பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புற நோயாளியாகவும், உள் நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக புறநோயாளியாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்லும் அவல நிலை உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.
ஆனால் மருத்துவமனையில் உள்ள குறைவான அளவிலான மருத்துவர்களே கூடுதல் பிரிவுகளையும் சேர்ந்து பார்க்கும் நிலை உள்ளது. எனவே விரைவில் மருத்துவர்கள் பற்றாக்குறையை சரி செய்து செய்து பொதுமக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி