உசிலம்பட்டி: தடை செய்த புகையிலை பொருட்களை விற்ற இருவர் கைது

77பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது உசிலம்பட்டி மதுரை ரோடு மாருதி நகரைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரது கடை மற்றும் வெள்ளை மலைப்பட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது கடைகளில் சோதனை நடத்திய போது புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது. அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார், இருவரிடமிருந்தும் தலா 3 கிலோ வீதம் 6 கிலோ புகையிலை பாக்கெட்டுகள், ஒரு இருசக்கர வாகனம், இரு செல்போன்கள், 4700 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி