பெண் சிசு கொலை. ஆட்சியர் வேதனை.

58பார்த்தது
மதுரையில் பெண்சிசு கொலை மீண்டும் கூடுதலாகி வருவதாக, உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று (அக். 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. கூடுதல் மற்றும் பயிற்சி ஆட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட இந்த கிராம சபை கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலியுறுத்தி உறுதி மொழி எடுக்கப்பட்டன.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூட்டத்தில் பேசியதாவது

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான அநீதி என்பது பாலியல் அநீதி மட்டுமல்ல, பெண் சிசுக் கொலை, பெண்சிசுவை கருவிலேயே அழிப்பதும் தான். ,
மதுரையிலேயே உசிலம்பட்டி பெண்சிசு கொலைக்கு பெயர் போனது என்பது உலகம் அறிந்த ஒன்று, அதை தடுத்து கொண்டு வருகிறோம். ஆனால் மீண்டும் கூடுதல் ஆகி வருவதாக தகவல் வருகிறது. அது நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இது நம் ஒவ்வொரு பெண்களின் கடமை, எல்லா பெண்களுக்கும் இதில் கடமை உள்ளது.
பெண்சிசு கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான், பெண்களுக்கு எதிராக பெண்கள் தான் நிறைய பேர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி