மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 1000 அடி உயர பாறையில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணி கிராமத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பாறையான வண்ணாத்திபாறையில் அமைந்துள்ளது பழமைவாய்ந்த பெருமாள் திருக்கோவில்.
தரைமட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இந்த பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையில் மழை வேண்டி சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து நன்கொடையாக நிதி திரட்டி, விழா எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். ,
இந்த ஆண்டும் இன்று புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பாறையில் அமைந்துள்ள இந்த பெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆதி வழக்கப்படி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்விற்காக சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐயப்பன் எம்எல்ஏ உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.