ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமர் ஆட்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநில பாஜக துணைத் தலைவரிடம் அவர் இதனைக் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்க பெண்களின் ஆசிகள் என்னைத் தொடர்ந்து உழைக்கத் தூண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.