மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நேற்று (அக். 11) ஆயுத பூஜை முன்னிட்டு பூஜை பொருட்கள், வாழை மரங்கள், பொரி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தற்காலிகமாக சாலையோரத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்தனர். இந்த கடைகளின் வியாபாரிகளிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் வசூல் செய்வதாக கூறி 30 ரூபாய்க்கான ரசீது வழங்கியும், பலரிடம் ரசீது வழங்காமலும் தனிநபர்கள் ரூபாய் 50 முதல் 200 ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, வசூல் செய்ய ஒப்பந்தம் ஏதும் விடவில்லை எனவும், யார் வசூல் செய்கிறார்கள் ஆய்வு செய்கிறோம் என தெரிவித்தனர். நகராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்படாத சூழலில் நகராட்சி ஊழியர்கள் மூலம் சாலையோர கடைகளிடம் தினசரி வாடகை வசூல் செய்வது வாடிக்கை ஆனால் நகராட்சி ஊழியர்கள் அல்லாத தனிநபர்கள் ரசீது வழங்கும் தொகையை விட கூடுதலாக வசூல் வேட்டை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.