கர்ப்பிணிகள் இடதுபுறமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என பெரியவர்கள் கூறுவதுண்டு. இதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன தெரியுமா.? ஒருக்களித்துப் படுக்கும் போது, உடலில் உள்ள பெரிய ரத்தக் குழாய்களான அயோடா மற்றும் இன்ஃபிரியர் வீணா கேவா போன்றவற்றின் மேல் அழுத்தம் குறையும். இதனால், கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். விளைவு, தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கும் தேவையான ரத்தம் செல்லும். ஆகையால் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.