நீட் தேர்வு: கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா சங்கத்தின் சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் நேற்று (செப்.,20) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் ஊதிய உயர்வு வழங்க கோரியும், பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பலனை வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மூட்டா சங்கத்தின் சார்பில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில், மூட்டா கிளை தலைவர் பால்ராஜ், செயலாளர் சிவசங்கரி தலைமையிலும், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில், மூட்டா சங்க மண்டல செயலாளர் ராபர்ட் தீலீபன், கிளைத் தலைவர் ராயப்பன் தலைமையிலும், சம ஊதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வாசலில் கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மாணவ மாணவியர்களின் நலனை பாதிக்கும் நீட் மற்றும் க்யூட் தேர்வுகளை ரத்து செய்ய கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி நடத்தினர்.

தொடர்புடைய செய்தி